
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை (பிப்.17) சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது. இந்த வாரம் திங்கள் தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் தை தொடங்கியே திருமண காலம் என்பதால் திருமணத்திற்காக நகை வாங்குபவர்களுக்கு இந்த வாரம் லாபகரமாக அமைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்திருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.5,250-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment