
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,933 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,974 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 124.57 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,194.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,995.00ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment