
இன்றில் இருந்து சரியாக ஓராண்டுக்கு முன்பு, 2022 பிப்ரவரி 18 அன்று, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான நீண்ட கால, பயன்பாடுள்ள உறவில் சிறப்புமிக்க புதிய அத்தியாயம் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் சையீத், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே விரிவான ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதாரப் பங்களிப்பு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க பிராந்திய நாடு ஒன்றுடன் இந்தியா முதல் முறையாக இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. இது மிகவும் முக்கியமானது மட்டுமின்றி இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே வெளிப்படையான பொருளாதார அதிகாரம் மற்றும் ஒருங்கிணைப்பின் மீதான பகிரப்பட்ட நம்பிக்கையைப் பிரதிபலிப்பதுமாகும். 80 சதவீதத்துக்கும் அதிகமான உற்பத்திப் பொருட்களுக்கு வரி நீக்கம் அல்லது வரி குறைப்பு, சேவைகள் பிரிவில் ஏற்றுமதியை அதிகரித்தல், முன்னுரிமை துறைகளில் முதலீட்டு வாய்ப்பை அதிகரித்தல், சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஒத்துழைப்புக்கான வாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றில் புதிய சகாப்தத்தை நாம் சிந்தித்திருக்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment