
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வடைந்து 59,594 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.60 புள்ளிகள் சரிந்து 17,618 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாப நஷ்டமின்றித் தொடங்கிய போதிலும், விரைவில் ஏற்றம் பெற்றன. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 154.40 புள்ளிகள் உயர்வடைந்து 59,722.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி60.25 புள்ளிகள் உயர்வடைந்து 17,679.00 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment