
மும்பை: புதிய பசுமை எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதானி குழுமம் 80 கோடி டாலர்நிதி (இந்திய மதிப்பில் சுமார்ரூ.6,560 கோடி) திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக, உலகவங்கிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செயல்படுத்தபடவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கானநிதிஒதுக்கீடு குறித்து அதானி குழுமம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பசுமை எரிசக்தி திட்டங்களுக்கான நிதியை பெறசுமிட்டோமோ மிட்சுயி பேங்கிங், டிபிஎஸ் பேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடம் அதானி குழுமம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment