
புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீத வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந் விர்மாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பணவீக்கம் உச்சம் தொட்டது. இதனால், உலக நாடுகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகின. இந்நிலையில், சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவின் வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை 6.1 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாகக் குறைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment