
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்வடைந்து 60,010 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 17,733 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும், நிலையில்லாத வர்த்தகத்தால் வீழ்ச்சியைச் சந்தித்தது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ்181.19 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,729.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.25புள்ளிகள் சரிவடைந்து 17,678.60 ஆக இருந்தது.
இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி ஆகியவைகளின் காலாண்டு வருவாய் சரிவால் விளைந்த தகவல் தொழில்நுட்ப பங்குகளின் கடும் வீழ்ச்சியால் திங்கள் கிழமை வர்த்தகம் அதற்கு முந்தைய 9 நாள் லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நஷ்டத்தில் நிறைவடைந்தது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை சற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் பின்னர் நிலையற்றதாக மாறியது. இதனால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment