
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றியே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 21 புள்ளிகள் சரிவடைந்து 60,278 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 17,804 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 88.73 புள்ளிகள் உயர்வடைந்து 60,389.31 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5.85 புள்ளிகள் உயர்ந்து 17,819.45 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment