
மும்பை: சென்னையைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நடப்பு 2022-23-ம் நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.133.29 கோடியை ஈட்டியுள்ளது. இது, இந்நிறுவனம் முந்தைய 2021-22-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம்ரூ.16.24 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
மத்திய பிரதேசத்தில் துணை நிறுவனமான ஸ்பிரிங்வே மைனிங் விற்பனை செய்யப்பட்டதையடுத்து மூன்றாவது காலாண்டில் லாபம் 7 மடங்கு உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment