
சென்னை: உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கெளதம் அதானி மீண்டும் இணைந்துள்ளார். ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 20 பணக்காரர்களில் தற்போது 18-வது இடத்தில் உள்ளார் கெளதம் அதானி. மற்றொரு இந்தியரான முகேஷ் அம்பானி இதே பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த ஜனவரி இறுதியில் பின்னடவை சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment