
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment