
சென்னை: ஜப்பானைச் சேர்ந்த மட்சுஷிதா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தோநேஷனல் என்னும் நிறுவனத்தை தொழிலதிபர் பி.ஓபுல் ரெட்டி 1972-ம் ஆண்டு தொடங்கினார். பின்னர் முதல் தொழிற்சாலை 1973-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் தொடங்கப்பட்டது. முதல் தயாரிப்பான நிப்போ பேட்டரிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. உயர் செயல்திறன்,குறைந்த விலை காரணமாக கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்திய சந்தையில் சிறப்பான முத்திரையை நிப்போ பதித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு டார்ச் லைட்டுகள், கொசு விரட்டும் பேட்டுகள், எல்இடி விளக்குகள் மற்றும் மின்சார பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்துவருகிறது. வணிக விரிவாக்க முயற்சியில், கைனகோ லிமிடெட் நிறுவனத்தில் முதலீட்டுகளை செய்து ரயில்வே, ராணுவ மற்றும் விமானம் சார்ந்த பாகங்களின் உற்பத்தியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment