
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவடைந்து 62,314 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1 புள்ளிகள் சரிந்து 18,397 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் தட்டையாக தொடங்கிய இன்றைய வர்த்தகம் வர்த்தக நேரத்தின்போது சரிவடையத் தொடங்கியது. காலை 09.58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 37.70 புள்ளிகள் சரிவடைந்து 62,308.01 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.35 புள்ளிகள் உயர்ந்து 18,403.20 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment