
மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டிலும் புள்ளிகள் உயர்ந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியான போது இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சியை எதிர்கொண்டது. நேற்றைய தினம் சுமார் 6,000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது. நிஃப்டி 50-ம் சுமார் 1,400 புள்ளிகளுக்கு கீழ் சரிந்திருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment