
சென்னை: கரூர் வைஸ்யா வங்கி கடந்த 2022 டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி லாபம் மற்றும் சொத்து தரத்தின் அடிப்படையில் வங்கி ஆரோக்கியமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
வங்கியின் இருப்பு நிலை அளவு கடந்த 2021 டிசம்பர் 31-ல் ரூ.77,612 கோடியாக இருந்தது. இது 14.7 சதவீத வளர்ச்சி பெற்று 2022, டிச.31-ல் ரூ.89,013 கோடியாக உள்ளது. அதேபோல மொத்த வணிகம் ரூ.1,22,664 கோடியிலிருந்து ரூ.1,39,062 கோடியாக உயர்ந்துள்ளது. இது 13.4 சதவீத வளர்ச்சியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment