About

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்துக்கு முயற்சி - உலகப் பொருளாதார மாநாட்டில் ஜெர்மனி பிரதமர் தகவல்

தாவோஸ்: சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டு விவாதித்து வருகின்றனர். இம்மாநாட்டில் கடந்த புதன்கிழமை அன்று ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோலஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.

சென்ற ஆண்டு ஜெர்மனி இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான உரையாடலைத் தொடங்கியது. மேலும், முதலீடு பாதுகாப்புத் தொடர்பாகவும் புவிசார் குறியீடு தொடர்பாகவும் உரையாடலை முன்னெடுத்தது. இந்நிலையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையில் ஜெர்மனி தீவிரமாக இறங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: