
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 2) சவரனுக்கு ரூ.120குறைந்து, ரூ.44,920-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய இரண்டு நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து இருந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். விற்பனையும் களைகட்டியது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கம் கண்டுவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment