About

ரூ.538 கோடி வங்கி மோசடி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வீட்டில் சிபிஐ சோதனை

மும்பை: தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பையில் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.

இது குறித்து சிபிஐ கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது. 2011 ஏப்ரல் முதல் 2019 ஜூன் வரையில் நிறுவனத்துக்கான ஆலோசனை சேவைகளுக்கென்று ரூ.1,152 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.420 கோடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சோதனையில் ரூ.197 கோடி சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: