
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்வடைந்து 61,900 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 18,297 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 79.79 புள்ளிகள் உயர்வடைந்து 61,844.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி34.80 புள்ளிகள் உயர்ந்து 18,299.20 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய குழப்பமான சூழல் இருந்த போதிலும் இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment