
சென்னை: ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டத்தை சென்ட்ரல்பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. `சென்ட் சுரக்ஷித் சம்ரிதி' என்றபெயரில் புதிய தொடர்பு வைப்புதிட்டத்தை சென்ட்ரல் பாங்க்ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
18 முதல் 50 வயதுக்குஉட்பட்ட வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்காக பிரத்யேகமாக இப்புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்களுக்குத் திட்டம் முதிர்வடையும் வரை தவணைத் தொகையின் 100 மடங்கு தொகை அளவுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment