
புதுடெல்லி: பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வரும் பிரபலஇன்ப்ளூயன்சர் ரவீந்திர பாலுபார்தி. இவரை சமூக வலைதளங் களில் 20 லட்சம் பேர் பின்தொடர் கின்றனர்.
இவர் தன் மனைவியுடன் இணைந்து ரவீந்திர பார்தி கல்விநிலையம் என்ற பெயரில் நிறுவனம்ஒன்றை 2016-ம் ஆண்டு தொடங்கினார். அதன் மூலம், பங்குச் சந்தைமுதலீடு தொடர்பாக பயிற்றுவித்து வந்துள்ளார். தன்னிடம் வந்து பயின்றால், பங்குச் சந்தையில் 1,000 சதவீதம் வரையில் லாபம் பார்க்க முடியும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி பலரும் அவரிடம் பயின்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment