
பெங்களூரு: கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் புதிய சிஇஓ ஆகவும், நிர்வாக இயக்குநராகவும் ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தியரி டெலாபோர்ட் ராஜினாமாவைத் தொடர்ந்து உடனடியாக ஸ்ரீனிவாஸ் பாலியாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்த விப்ரோ நிர்வாகம், “கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய தியரி, இந்த நிறுவனத்துக்கு வெளியே தனது கனவைத் தொடர இந்த பதவியிலிருந்து கீழறங்குகிறார்” என்று தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment