
சென்னை: இந்திய ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள், ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய காப்புரிமைகளை உலக அளவில் எடுத்துச்செல்லும் நோக்கில் சென்னை ஐஐடி புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கியுள்ளது.
இந்த அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலராக வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவநாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் நுழையும். மேலும் ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி உலக அளவில் கிடைக்கும். ஐஐடியின் படிப்புகள் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment