
மேற்கு சசெக்ஸ்: 118 ஆண்டுகால வரலாற்றில் கடந்த 2022-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6,021 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் விற்பனை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2005-ல் 796 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment