
வேலூர்: பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஏப். 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 30 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கண்ணமங்கலம் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப். 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment