
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.48,840-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,105-க்கும்,பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.48,840க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,600க்கு விற்பனையாகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment