
திருப்பூர்: நடப்பு மாதத்துக்கான முதல் 2 வாரங்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் கடந்த மார்ச் 1-ம் தேதி அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து நேற்று மீண்டும் நூற்பாலைகள் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தியிருப்பது தொழில் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: பஞ்சு, நூல் விலைஉயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment