
கலிஃபோர்னியா: ஸ்னோஃபிளேக் (Snowflake) அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனம் ஆகும். இத்துறையில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பிராங் ஸ்லூட்மேன் பொறுப்பில் இருந்தார்.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய சிஇஓ-வாக ஸ்ரீதர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதர் ராமசாமி 1967-ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment