
கோவை: ‘சிட்டி’ ‘சைமா’ அமைப்புகளின் கீழ் பல்வேறு தேசிய மற்றும் மாநில ஜவுளித்தொழில் அமைப்புகள், தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரேடிசன் புளூ ஹோட்டலில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி)தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் ஆகியோர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கு கோவையில் வரும் 31-ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கும். மாலை 4 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர்பியூஷ்கோயல் தலைமை வகிக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment