
சென்னை: பெண் குழந்தைகளுக்கான ‘ரெப்கோ தங்கமகள் சிறப்பு டெபாசிட் திட்டம்’ மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ‘ரெப்கோ விருக்‌ஷா சிறப்பு கடன் திட்டம்’ ஆகியவை ரெப்கோ வங்கிமற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனம் சார்பில் நேற்று தொடங்கப்பட்டன.
இந்த திட்டங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, ‘ரெப்கோ விருக்‌ஷா’ திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி கடனைமகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பிளஸ்-2வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ - மாணவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் அவர்களின்உயர் கல்விக்கான ஊக்கத்தொகை ஆணைகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment