
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 202 புள்ளிகள் (0.31 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 64,948 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55 புள்ளிகள் (0.28 சதவீதம்) வீழ்ந்து 19,310 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 303.23 புள்ளிகள் சரிவடைந்து 64,847.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 97.60 புள்ளிகள் சரிந்து 19,267.65 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment