
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் 3 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்வடைந்து 65,220 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்ந்து 19,396 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கின. காலை 10:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84.21 புள்ளிகள் உயர்வடைந்து 65,300.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 19.00 புள்ளிகள் உயர்ந்து 19,412.60 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment