
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வடைந்து 65,234 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 19,413 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகவே தொடங்கின. தொடர்ந்து வர்த்தகத்தின் போது சரிவைச் சந்தித்தது. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 57.88 புள்ளிகள் சரிவடைந்து 65,162.15 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14. புள்ளிகள் சரிந்து 19,381.80 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment