
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 388 புள்ளிகள் (0.59 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,151 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99 புள்ளிகள் (0.51 சதவீதம்) வீழ்ந்து 19,365 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது சரிவை நோக்கிச் சென்றன. காலை 10:11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 196.51 புள்ளிகள் சரிவடைந்து 65,342.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67.70 புள்ளிகள் சரிந்து 19,397.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment