
புதுடெல்லி: மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் பிஎஸ் 6 மாடல் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிமுகப்படுத்தினார். இது மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்படுகிறது. அதை 20% ஆக அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம் சில இடங்களில் 20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025-க்குள் நாடு முழுவதுவம் 20% எத்தனால் கலப்பு பெட்ரோலை பரவலாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment