
புதுடெல்லி: கடந்த ஜூலை மாதத்தில் சைவ உணவின் (Veg Thali) விலை சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் அசைவ உணவின் விலை சுமார் 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்துடனான ஒப்பீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை உயர்வு இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை மும்மடங்கு அதிகரித்ததும், மிளகாய் (விலையில் 69% உயர்வு), வெங்காயம் (விலையில் 16% உயர்வு) மற்றும் சீரக விலையில் ஏற்பட்ட உயர்வும் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment