
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 1,628 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமுகமாக இருந்து வந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் - சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் - நிப்டி ஆகியவை புதிய உச்சங்களை எட்டின. இந்நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தையில் லேசான சரிவு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது. நேற்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 ஆகவும், நிப்டி 460 புள்ளிகள் சரிந்து 21,572 ஆகவும் நிலைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment