
புதுடெல்லி: மின்னணு கட்டண வசூல் முறையின் செயல்திறனை அதிகரிக்கவும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ‘ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக்’ முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது பல வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்துவது அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல ஃபாஸ்டேக்குகளை இணைப்பது போன்ற பயனர் நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் - கேஒய்சி-யைப் புதுப்பிப்பதன் மூலம் தங்கள் சமீபத்திய ஃபாஸ்டேகின் கேஒய்சி செயல்முறையை முடிப்பதற்கு ஃபாஸ்டேக் பயனர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஊக்குவிக்கிறது. செல்லுபடியாகும் இருப்புத் தொகை கொண்ட ஆனால் முழுமையற்ற கேஒய்சி கொண்ட ஃபாஸ்டேகுகள் 2024 ஜனவரி 31-க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் அல்லது கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment