
புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஓராண்டு முடிந்த நிலையில், முன்பைவிட வலிமையான செயல்பாட்டைக் கொண்டுள்ளோம் என்று அதானி குழும தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு பல சோதனைகள் மற்றும் இன்னல்களை அதானி குழுமம் சந்தித்தது. அதுதான், நமது குழுமத்தை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளது. அதானி குழுமத்தின் செயல்பாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது. சொத்துகள் மேம்பட்டுள்ளதுடன், தாராவி மறுமேம்பாடு உட்பட பல முக்கியத் திட்டங்களை குழுமம் முன்னெடுத்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சமமாக ரூ.40,000 கோடியை குழுமம்திரட்டியுள்ளது. சில நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலமாக ரூ.17,500 கோடியை திருப்பிச் செலுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment