
புதுடெல்லி: துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான இணையதளத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். பருப்பு வகைகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதை ஊக்குவிக்கும் கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற வேண்டும். பருப்பு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வது மிகவும் அவசியம். வரும் 2027-ம் ஆண்டு டிசம்பருக்குள் நாடு பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு என நான் உறுதி அளிக்கிறேன். நமது நாட்டில் விவசாயத்துறை மிகப் பெரிய மாற்றத்தை விவசாயிகளால் சந்தித்து வருகிறது.
தேசிய விவசாய கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றில் நீங்கள் பதிவு செய்திருந்தால் உங்களிடம் இருந்து பருப்புகளை அரசு கொள்முதல் செய்யும். இது பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி. குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்புகளை கொள்முதல் செய்ய வேண்டிய பொறுப்பை இதன்மூலம் அரசு ஏற்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment