
புதுடெல்லி: மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலர் ஆகும். இது 2030-31 நிதி ஆண்டில் 6.7 டிரில்லியன் டாலராக உயரும். தற்போது இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2,500 டாலராக உள்ளது. இது 2030-31 நிதி ஆண்டில் 4,500 டாலராக உயரும். மேலும் நடப்பு ஆண்டு முதல் இந்தியா ஆண்டுக்கு 6.7 சதவீத வளர்ச்சியில் பயணிக்கும். ஜிஎஸ்டி பலனை இந்தியா உணரத் தொடங்கும். திவால் நடைமுறைச் சட்டத்தால் நிறுவனங்களின் நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறை முதன்மையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment