
புதுடெல்லி: பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், செலவு குறைப்பு நடவடிக்கையாக 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தைப் பொருத்தவரையில் செயல்பாட்டில் ஆட்டோமேஷனைக் கொண்டு வருவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு பிரிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிக பலனை கொடுத்துள்ளது. இதையடுத்து, செலவு குறைப்பு நடவடிக்கையாக விற்பனை, பொறியியல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 100 பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment