
சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000-க்கு விற்பனையானது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த மே 1-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.45,040-க்கும், மே 3-ம் தேதி ரூ.45,648-க்கும் விற்பனை ஆனது. பின்னர் ஜூன் மாதத்தில் பவுன் விலை ரூ.47,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர், தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment