
மதுரை: கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் வெயிலுக்கு தினமும் 8 டன் முதல் 10 டன் காய்கறிகள் கெட்டுப் போவதாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். நஷ்டத்தால் பல வியாபாரிகள் கடை போடுவதை தவிர்த்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 100 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆந்திரா, கர்நாடகா, ஓசூர், ராய்க்கோட்டை, ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், திண்டுக்கல் மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு காய்கறி வியாபாரிகள், மளிகைக் கடைக்காரர்கள், பொது மக்கள் காய்கறி வாங்க வருகிறார்கள். கடந்த பிப்ரவரி முதல் அதிகரித்த வெயிலின் தாக்கம் தறபோது வரை குறையவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment