
மும்பை: கடன் முடிந்ததும் அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: "அசையும் அல்லது அசையா சொத்துகளின் பேரில் கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களது அசல் ஆவணங்களை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும் உத்தரவுகளில் இதுவும் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment