
சென்னை: வரும் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை ஐந்து மணி வரை கோவையில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான இலவச பயிற்சி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. வரும் சனிக்கிழமை செப்டம்பர் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஹிந்துஸ்தான் காலேஜ் டிபார்ட்மென்ட் ஆஃப் சோசியல் வொர்க் உடன் இணைந்து இந்துஸ்தான் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அரங்கத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட பெண்களுக்காக கருத்தரங்கம் மற்றும் கைத்தொழில் பயிற்சி லோன் மேளா ஆகியவை நடைபெற உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment