
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியிருந்தது. சென்செக்ஸ் 528 புள்ளிகள் (0.79 சதவீதம்) உயர்வடைந்து 67,127 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 176 புள்ளிகள் (0.89 சதவீதம்) உயர்ந்து 19,996 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 307.50 புள்ளிகள் உயர்வடைந்து 66,906.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 104.20 புள்ளிகள் உயர்ந்து 19,924.15 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment