
மதுரை: ஓணம் பண்டிகை முடிந்த நிலையில் மீண்டும் காய்கறிகள் விலை வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. இதனால், குறைந்தபட்ச ஆதார விலைகூட கிடைக்காமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மதுரையில் மாட்டுத்தாவணி மற்றும் பரவையில் செயல்படும் மொத்த விலை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. பரவை மார்க்கெட்டுக்கு மட்டும் தினமும் 450 டன் உருளைக் கிழங்கு, 500 டன் பெரிய வெங்காயம், 250 டன் சிறிய வெங்காயம் மற்றும் பிற காய்களில் 300 டன் விற்பனைக்கு வருகின்றன.
அதுபோல், மாட்டுத்தாவணி மார்க் கெட்டுக்கு 30 லாரிகளுக்கு மேல் காய் கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இரு மார்க்கெட்டுகளில் இருந்தும் 9 மாவட் டங்கள் மற்றும் கேரளாவுக்கு காய்கறிகள் விற்பனைக்குச் செல்கின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கர்நாடகா, ஆந்திராவில் பெய்த கன மழையால் தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.200 விலை உயர்ந்தது. மற்ற காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ளூர் தக்காளி உட்பட பிற காய்கறிகள் விற்பனைக்கு வந்த நிலையில் ஓணம் பண்டிகை வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment