
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன. சென்செக்ஸ் 52 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயர்வடைந்து 67,519 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்ந்து 20,103 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்தன. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 30.43 புள்ளிகள் உயர்வடைந்து 67,497.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.85 புள்ளிகள் உயர்ந்து 20,111.85 ஆக இருந்தது. முன்னதாக 9.32 மணியளவில் சென்செக்ஸ் 250.18 புள்ளிகள் உயர்ந்து 67,717.17 ஆகவும் நிஃப்டி 81.25 புள்ளிகள் உயர்வடைந்து 20,151.25 ஆகவும் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment