
மும்பை: பங்குச்சந்தை இன்று காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 498.77 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,302.07 ஆக இருந்தது. இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 307 புள்ளிகள் சரிவடைந்து 66,493 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 77 புள்ளிகள் சரிந்து 19,823 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 498.77 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,302.07 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 141.85 புள்ளிகள் சரிந்து 19,759.55 ஆக இருந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் மீண்டும் வட்டி விகிதம் உயரலாம் என்ற எண்ணம் உருவாகியிருப்பது, உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாம் நாள் சரிவுடன் தொடங்கின. பெரும்பான்மையான பங்குகள் சரிவில் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment